திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை
பதிவு : ஜூன் 14, 2019, 08:45 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென பலத்த சூறாவளி காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென பலத்த சூறாவளி காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால்,  நகரின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. சில பகுதிகளில் மரங்கள் முறிந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

புதுக்கோட்டையில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை :புதுக்கோட்டையில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கஜா புயலுக்குப் பிறகு தஞ்சையில் பெய்த மழை :
தஞ்சையிலும் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயலின்போது மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பல மாதங்களாக 100 டிகிரிக்கு மேல் அடித்த வெயில் தாங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் மேகங்கள் திரண்டு, திடீரென்று மழை பெய்தது.

புதுச்சேரியில் வெப்பத்தை தணித்த மழை :கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால், புதுச்சேரி பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

124 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

638 views

பிற செய்திகள்

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

67 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

7 views

திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.

8 views

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

15 views

ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

7 views

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.