அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு உள்ளன - தமிழிசை
பதிவு : ஜூன் 14, 2019, 07:20 AM
மாற்றம் : ஜூன் 14, 2019, 08:17 AM
தற்போது அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு இருப்பதாகவும் தேர்தல் நேரத்தில் அமைவது தான் கூட்டணி என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தற்போது அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு இருப்பதாகவும், தேர்தல் நேரத்தில் அமைவது தான் கூட்டணி என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்ததன் மூலம் அதிமுக-பாஜக நட்புறவை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அனைத்து நேரங்களிலும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றும், மத்திய மாநில அரசுகள் நட்புறவோடு இருக்கும் காரணத்தால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.எல்லோரும் மதிக்கும் தமிழக வரலாற்றை திரித்து நாகரிகமற்ற முறையில் கூறுவது  தவறு என்று கூறிய தமிழிசை, வரலாற்று ஆதாரம் இல்லாமல் பிரிவினை ஏற்படுத்துவதை போல பேசுவதை சிலர் நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

644 views

பிற செய்திகள்

குடிநீர் பஞ்சம் : திசை திருப்ப முயற்சி - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

14 views

கூடங்குளம் அணுகழிவு திட்டம் : மக்களுக்கு பேராபத்து - நடிகர் இமான் அண்ணாச்சி கருத்து

மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுகழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால் முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்று நடிகர் இமான் அண்ணாச்சி தெரிவித்தார்.

6 views

லிங்காராசனம் செய்து 10ஆம் வகுப்பு மாணவர் சாதனை - நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை பதிவு

வி௫துநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஷ்யாம் கணேஷ் கடந்த 5 ஆண்டுகளாக யோகாவில் பல சாதனைகளை படைத்து வரும் இவர், 3 முறை தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளார்.

13 views

இனி ஊடகம் முன்பு நிற்க மாட்டேன் - நடிகர் விஷால்

ஒன்றரை வருடமாக கட்டட பணி தாமதமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு சுமத்துகிறவர்கள், அதை முன்பே ஏன் கூறவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

143 views

புதுச்சேரி : கணவரின் கண்முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு - காண்போரை அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை வழிமறித்த 3 மர்ம நபர்கள், 12 சவரன் செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 views

குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - ராஜேந்திர பாலாஜி

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.