காதலியுடன் வெளியூர் தப்பி சென்ற இளைஞர் - சினிமா பாணியில் அரங்கேறிய கொடூர கொலை
பதிவு : ஜூன் 14, 2019, 05:30 AM
காதலியுடன் வெளியூருக்கு தப்பி சென்ற இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், காதலியும் மாயமாகியுள்ள சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வெண்ணாற்று கரையில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாயில் துணி கட்டிய நிலையில், சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நடுக்காவேரி காவல்துறை, சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கியது.

சடலமாக கிடந்தவர் பெயர் பிரசாந்த் என்பதும் காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த்... இவர் பக்கத்து ஊரான இலுப்பக்கோரையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த‌தாக தெரிகிறது. 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணுடன் வீட்டிற்கு வந்த பிரசாந்த், பெண்ணை திருப்பி அனுப்பினால்  தற்கொலை செய்துகொள்வோம் என தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனால் வேறு வழியில்லாமல் பிரசாந்தின் தாய் மலர்கொடி அவர்களை ஏற்றுக்கொள்ள, காதல் ஜோடி சேலம் நோக்கி தப்பி சென்றுள்ளது. அதற்குள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காதல் ஜோடியை வலை வீசி தேடியுள்ளது இளம்பெண்ணின் குடும்பம்.

தன் குடும்பத்திற்கு ஆபத்து என்பதை உணர்ந்த பிரசாந்த்,  தாய் மலர்க்கொடிக்கு போன் செய்து, தங்கையை அழைத்து கொண்டு கும்பகோணம் செல்லுமாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில், சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த காதல் ஜோடியை பிரசாந்தின் நண்பரும் இளம் பெண்ணின் உறவினருமான ஒருவர் சமயபுரத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். நண்பர் என்று நம்பி சமயபுரம் டோல்கேட் அருகே காதல் ஜோடி பேருந்தில் இருந்து இறங்கியுள்ளது. இதையடுத்து, அங்கு வந்த பிரசாந்தின் நண்பர், காதலை தங்கள் குடும்பம் ஏற்றுகொண்டதாக  நைசாகி பேசி அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரமாக  பேச்சு நீடித்த நிலையில், திடீரென காரில் வந்த கும்பல் ஒன்று, பிரசாந்தை மட்டும் தனியாக கடத்தி சென்றுள்ளது. 

இதையடுத்து, வாயில் துணி கட்டி, தலை உள்பட உடலின் பல பாகங்களில் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் பிரசாந்த்.

பிரசாந்தின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் சென்ற இளம்பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிரசாந்தின் காதலியான அந்த இளம்பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினால் தான் பிரசாந்த் கொலையில் தொடர்புடைய அனைவரும் சிக்குவார்கள் என்று பிரசாந்தின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1264 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5796 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6596 views

பிற செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது

7 views

சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

3 views

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9 views

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

16 views

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.