சீருடையில் இருந்த போது காவலர் கைது : 5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூன் 14, 2019, 03:39 AM
சீருடையில் இருந்தபோது சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சீருடையில் இருந்தபோது சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமாரவேல். இவர் மீது எஸ்.பி. அலுவலக ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில், குமாரவேல் சீருடையில் இருந்த போது கைது செய்யப்பட்டு பிறகு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குமாரவேல் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், சீருடையில் இருந்த காவலரை கைது செய்தது சட்டவிரோதம் என்றும், காவல் உதவி ஆய்வாளர் குமாரவேலுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1264 views

பிற செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

1 views

சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது

3 views

சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

3 views

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9 views

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

15 views

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.