வாகன சோதனையின் போது போலீசார் மீது தாக்குதல் : தப்பியோடியவர்களை கைது செய்த போலீஸ்
பதிவு : ஜூன் 14, 2019, 03:25 AM
மதுரையில் வாகன சோதனையின் போது காவலர்களை தாக்க முயற்சித்த 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அண்ணாநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மஸ்தான்பட்டியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயன்றனர். இந்நிலையில் ஆட்டோவில் இருந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயற்சித்து தப்பிவிட்டனர். இதனையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றம் அருகே அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தியதில், முன்விரோதம் காரணமாக சில நபர்களை கொலை செய்ய ஆயுதங்களுடன் சென்றபோது போலீசார் சோதனையில் சிக்கியதாக தெரிவித்துள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஆயுதங்களை கொண்டு காவலர்களை தாக்க முற்பட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் ஏழு பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

100 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

7 views

திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.

9 views

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

15 views

ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

7 views

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.