அணு கழிவு மையத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது : கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்
பதிவு : ஜூன் 14, 2019, 03:17 AM
கூடங்குளம் பகுதியில் அமைய அணு கழிவு மையத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அணு உலை 1, 2-இல் இருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே அணு கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அணு உலை கழிவுகள் இங்கு கொண்டு வரப்படாது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு கழிவுகளில் இருந்து கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது என்றும் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. அணு கழிவு மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலம், நீர் ஆகியவை  மாசுபடாது என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றியே அணு கழிவு மையம் அமைக்கப்படுவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள் அணு கழிவு மையம் அமைக்க வேண்டி இருப்பதால் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1297 views

பிற செய்திகள்

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

சிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்

கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

14 views

நகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...

சென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

89 views

கன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்

கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

165 views

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.