அடுத்தடுத்து 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் : வளைகுடா பகுதியில் பதற்றம்
பதிவு : ஜூன் 13, 2019, 11:25 PM
ஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வளைகுடா பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நார்வேக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல் சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல்களில் கொண்டுவரப்பட்டது கெமிக்கல் என்றும் எண்ணெய் இல்லை என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.  இதேபகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது வளைகுடா பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களால் உலகளவில் எண்ணெய் விலை 4 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்துள்ளது.தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சந்தேகத்திற்குரிய தாக்குதல் குறித்து பிராந்திய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1264 views

பிற செய்திகள்

வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடன் பொழுதுப் போக்கு பூங்கா

வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடனான பொழுதுப் போக்கு பூங்கா சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது.

5 views

சீனாவில் நிலநடுக்கம் - 6 பேர் பலி : ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

32 views

பென்சில்வேனியா மாகாணத்தில் பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

17 views

ஜப்பானில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து...

அதிகரிக்கும் கத்திக்குத்து சம்பவங்களால் மக்கள் பீதி.

57 views

பெண் எம்பியை தாக்கிய சக எம்பி : குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு

கென்யாவில் சமீபத்தில் கெடி என்ற பெண் எம்பியை ரஷித் அசிம் அமின் என்ற மற்றொரு கென்ய நாட்டு எம்பி தாக்கியதாக புகார் எழுந்தது.

72 views

ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக தைவானில் போராட்டம் : மாணவர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும், ஒப்படைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.