கடந்த 3 ஆம் தேதி மாயமான ஏ.என்.32 ரக விமான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
பதிவு : ஜூன் 13, 2019, 08:30 PM
கடந்த 3 ஆம்தேதி மாயமான ஏ.என்.32 ரக விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளான பகுதி நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் அதில் பயணம் செய்த 13 பேரின் உடல்களை பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளன.
உடல்களை அருணாச்சலப்பிரதேச மாநில தலைநகருக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி அசாமின் ஜோர்க​ட்டில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெச்சுக்கா ராணுவ தளத்திற்கு சென்ற இந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவில்லை. 50 நிமிடத்தில் வரவேண்டிய விமானம் வராததை அடுத்து அதனை தெடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 12 ஆயிரம் அடி உயரத்தில், மோசமான வானிலை காரணமாக, மலையில் மோதி நொறுங்கி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்து உள்ள நிலையில், அதனை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர், விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  ஆபத்தான மலைத்தொடர் மற்றும் இடைவிடாத மழையால் விமானத்தை தேடும் பணியில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 5 பேர் பொது மக்கள் என விமானப்படை தெரிவித்துள்ளது. கருப்புப் பெட்டி மற்றும் 13 உடல்கள் தனி விமானம் மூலம் தலைநகருக்கு கொண்டு வரப்படுகிறது.

பிற செய்திகள்

தமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....

அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

59 views

குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி கூறும் தீர்மானம் : பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை

ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம் என, பிரதமர் மோடி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

14 views

அமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

25 views

மேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்

மேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.

14 views

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

79 views

"ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 155 பேர் கைது" - மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 155 நபர்களை, இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.