நடிகர் சங்க தேர்தலில் பணத்திற்கு மயங்கி வாக்களிக்க வேண்டாம் : ராதாரவி வேண்டுகோள்
பதிவு : ஜூன் 13, 2019, 05:04 PM
நடிகர் சங்க தேர்தலில் பணத்திற்காக மயங்கி யாரும் வாக்களிக்க வேண்டாம் என நடிகர் ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் பணத்திற்காக மயங்கி யாரும் வாக்களிக்க வேண்டாம் என நடிகர் ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு, சேலம் நாடக நடிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து, சங்கரதாஸ் சுவாமி அணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நயன்தாராவை பற்றி தாம் இயல்பாக பேசியதாகவும், ஆனால் சினிமா நடிகை பற்றி பேசியதற்கு, திமுகவில் இருந்து விலக்க வேண்டிய காரணம் என்ன என வினவினார். மேலும், நடிகர் சங்க தேர்தலில் காசுக்கு மயங்கி யாரும் வாக்களிக்க வேண்டாம் என நடிகர்களை அவர் கேட்டுக் கொண்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.