ஏஎன்- 32 ரக விமானப்படை விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவு : ஜூன் 13, 2019, 04:24 PM
காணாமல் போன ஏஎன்- 32 ரக விமானப்படை விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அசாமின் ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்திற்கு புறப்பட்ட ஏஎன்-32 ரக விமானம், 10 நாட்களுக்கு முன் திடீரென மாயமானது. நீண்ட தேடலுக்கு பிறகு, கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேச மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. விமானம் விழுந்த நொறுங்கியதாக கருதப்படும் இடத்தை மீட்பு படை இன்று காலை சென்றடைந்தது. தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு, விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு விமானப்படை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. 

பிற செய்திகள்

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது

26 views

ஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 views

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை இன்று முதல் அமல்

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

டெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்

டெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

6 views

மக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்

மக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.

8 views

நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை

நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.