சென்னை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் வந்த ஒப்பந்த உரிமையாளர்கள் : 8 மாத நிலுவை தொகையை வழங்க கோரிக்கை
பதிவு : ஜூன் 13, 2019, 03:56 PM
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஒப்பந்த உரிமையாளர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தலைமை பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வந்தனர்.
பிஎஸ்என்எல் ஒப்பந்த உரிமையாளர்களுக்கு கடந்த 8 மாதமாக சம்பள பணம் வழங்காததை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஒப்பந்த உரிமையாளர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தலைமை பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வந்தனர். முதன்மை அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க சென்றனர். ஆனால் அவர் மாலை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் அழகர்சாமி, கடந்த 8 மாதமாக தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தரவில்லை என்றும், முதன்மை அதிகாரியுடன் பேசுவதற்காக நேரம் கேட்டும், அவர் தங்களை பார்க்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மனு அளித்த பின்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுக்க முன்வருவோம் என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

சிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்

கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

15 views

நகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...

சென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

89 views

கன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்

கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

171 views

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.