குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி மனு - ஜூன் 17க்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூன் 13, 2019, 01:39 PM
குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், வரும் 17ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குரூப் ஒன் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வெளியானது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி பார்த்திபன், முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான டிஎன்பிஎஸ்சி தரப்பு வழக்கறிஞர், 200 வினாக்களின் 24 கேள்விகள் தவறானது என ஒப்புக்கொண்டு, இது குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என முறையிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் ஒன் தேர்வில், குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறினார். இந்த மனு தொடர்பாக, ஜூன் 17ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

137 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

8 views

திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.

12 views

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

16 views

ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

7 views

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.