ஆறு துறைகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்
பதிவு : ஜூன் 13, 2019, 01:21 PM
பள்ளிக்கல்வி, உள்ளாட்சி உள்பட ஆறு துறைகளுக்கான கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வின் போது, ஆறு துறையை சார்ந்த அமைச்சர்கள், செங்கோட்டையன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோரும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பள்ளிகல்வித்துறை சார்பில் 12 கோடி ரூபாய் செலவில் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறன் அட்டை வழங்கினார். சுற்றுச்சூழல் துறையில் சிறப்பாக செயல்பட்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் நெல்லை முன்னாள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு பசுமை விருதுகளை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். பிளாஸ்டிக் தடையாணையை சிறப்பாக செயல்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா மற்றும் சில்பா பிரபாகர் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

நேர்மையாக பணிபுரிவோருக்கு நல்ல பலன் காத்திருக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி

நேர்மையாக பணியாற்றினால் பலன் காத்திருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

475 views

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் - தமிழிசை

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார்.

155 views

துணை முதலமைச்சரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி - நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் பழனிசாமி

மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சரின் சகோதரரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்.

812 views

பிற செய்திகள்

"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

13 views

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23 views

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

16 views

"அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு" - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

13 views

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் வேலூர் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இந்த தொகுப்பு.

13 views

சாத்தனூர் அணையின் மதகுகளை ஏற்ற மறுத்த ஊழியர்கள் : விவசாய சங்கத்தினர் ஊழியர்களிடையே தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை பார்வையிட சென்ற விவசாய சங்கத்தினருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.