அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை விடுத்த ராஜன் செல்லப்பா : பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக கூட்டம்
பதிவு : ஜூன் 13, 2019, 10:04 AM
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மதுரையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் அதிமுக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கட்சியில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் ஒற்றைத் தலைமை என்ற வார்த்தையை கையில் எடுத்தார் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா. மதுரை தொகுதியில் போட்டியிட்ட இவரது மகன் ராஜ் சத்யன் தோல்வியடைந்த நிலையில், ஒற்றைத் தலைமை தான் கட்சிக்கு தேவை என்றார். இவரின் இந்த பேச்சு அதிமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, கட்சிக்குள் எந்த வித கோஷ்டி பூசலும் இல்லை என்றார். 

அதேநேரம் இதுதொடர்பான கேள்வியை துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்திடம் முன்வைத்தபோது, ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்தபிறகு பதிலளிக்கிறேன் என்றபடி நகர்ந்தார்...

அமைச்சர்கள் உதயகுமாரும், ராஜேந்திர பாலாஜியும் ஒற்றைத் தலைமைக்கான அவசியம் அதிமுகவுக்கு தேவையில்லை என்றும், கட்சி கட்டுக்கோப்பாகவே இருக்கிறது என பதிலளித்தனர். 

அதேநேரம் அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் யாரும் பொதுவெளியில் விவாதிக்க கூடாது என அதிமுக அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டது.

ஆனால் இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருந்த ராஜன் செல்லப்பா சில நாட்களிலேயே தன் முடிவில் இருந்து சற்று மாறினார். கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது என கூறிய அவர், தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்றார்...

இந்தநிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள்
மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வருமாறு போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நிச்சயம் இதுதொடர்பான ஒரு முடிவு எடுக்கப்படலாம் என தொண்டர்கள் எதிர்பார்த்து நின்றனர். 

ஆனால் பல தீர்மானங்களை நிறைவேற்றிய அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றி ஒருவரும் வாய்திறக்கவில்லை என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்..

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடங்கிய அதிமுக கூட்டம், எந்த வித பதற்றத்தையும் வெளிப்படுத்தாமல் சாதாரண ஒரு கூட்டம் போலவே நடந்து முடிந்தது... 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

4039 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

480 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

377 views

பிற செய்திகள்

ஸ்டாலினின் திடீர் மாற்றம்...ஆளுநரின் திடீர் அழைப்பு...

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

0 views

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

33 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

49 views

இந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: ஆளுநரின் திடீர் அழைப்பும்...ஸ்டாலினின் திடீர் மாற்றமும்..

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

87 views

ராஜேந்திரபாலாஜி உருவப்பொம்மை எரிப்பு -காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, சென்னை - தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

647 views

போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது

மதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.