ரூ.27.6 கோடி கடன் மோசடி - வங்கி தலைமை மேலாளர், தரகர் மீது சி.பி.ஐ. வழக்கு
பதிவு : ஜூன் 13, 2019, 09:49 AM
போலி ஆவணங்கள் உதவியுடன் நடைபெற்ற கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி தலைமை மேலாளர், தரகர் உள்பட 59 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
போரூர், வடபழனி ,அண்ணா நகர், சைதாபேட்டை இந்தியன் வங்கி கிளைகளில் போலியான ஆவணங்கள் மூலம் 27 புள்ளி 6 கோடி ரூபாய் கடன் மோசடி நடைபெற்றதாக சி.பி.ஐ.யிடம், அந்த வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சரவணன் என்ற தரகர் மூலமாக இந்த மோசடி  நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், போரூர் இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் பாரி உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தலைமை மேலாளர் பாரி ,தரகர் சரவணன் உட்பட 59 பேர் மீது சி.பி.ஐ. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் சிபில் ஸ்கோர் எனப்படும் கடன் வழங்குவதற்கான மதிப்பீடு குறைவாக உள்ளவர்கள், குறைந்த மதிப்புள்ள சொத்துக்கு அதிக அளவு கடன் தேவைப்படுபவர்கள் ஆகியோரை குறிவைத்து போலி ஆவணங்கள் மூலம் தரகர் சரவணன் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் வேறு எந்தெந்த வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானியருக்கு கார் கொடுத்த அப்துல்காதர் ரஹீம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

பாகிஸ்தானை சேர்ந்தவர் தமிழகம் வருவதற்கு உதவிய கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் உள்பட 3 பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4540 views

குறைந்த விலையில் பெட்ரோல் சேமிக்கும் இயந்திரம் - கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

90 views

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட போர் ஆயுதங்கள்

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில், பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் போர் ஆயுதங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

53 views

பிற செய்திகள்

கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

0 views

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது

நேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 views

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

11 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

22 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

2262 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.