மணல் திருட்டின் போது இளைஞர் உயிரிழப்பு : சடலத்தை போலீசார் கைப்பற்ற கிராமமக்கள் எதிர்ப்பு
பதிவு : ஜூன் 13, 2019, 06:58 AM
ஆரணியில் மணல் திருட்டில் ஈடுபட்டபோது மணலில் புதைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணியில் மணல் திருட்டில் ஈடுபட்டபோது மணலில் புதைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் காலனி பகுதியை சேர்ந்த சரவணன், தனது நண்பர்கள் மகாலிங்கம் மற்றும் குட்டிமணியுடன் சேர்ந்து கமண்டல நாகநதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டார். அப்போது திடீரென சரிந்த மணலில் புதைந்து சரவணன் மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரவணனின் சடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். தகவலறிந்த ஆரணி கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்ற சென்றனர். அப்போது போலீசாரை தடுத்து சேவூர் காலனி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் நிலைமையை எடுத்து கூறி சமரசம் செய்தனர். இதனையடுத்து மறியலை பொதுமக்கள் கைவிட, சரவணன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து : இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

94 views

4 மாடி கட்டடம் இடிந்து விபத்து : 12 பேர் பலி, 8 பேர் படுகாயம்

மும்பையில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில், 12 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

34 views

ஆரணியில் சல்லடை மூலம் சலித்து ஆற்று மணல் கொள்ளை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆரணியில் சல்லடை மூலம் சலித்து ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

22 views

பிற செய்திகள்

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

4 views

மதுரை: தூக்கில் தொங்கிய இளைஞர் - உடலை எரிக்க முயன்ற உறவினர்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரில் சங்கர் என்ற இளைஞர் வீட்டின் மாடியில் உள்ள வாசலுக்கு வெளியே தூக்கில் தொங்கியுள்ளார்.

122 views

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை : 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்.

90 views

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆறுதல்

தேனி மாவட்டம் போடி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

3 views

ஸ்கூட்டரில் நீதிமன்றத்திற்கு வந்த நிர்மலாதேவி

பேராசிரியை நிர்மலாதேவி, இரு சக்கர வாகனத்தில் வந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

6 views

14 வயது சிறுவன் உயிரை பறித்த அலட்சியம் : வாய் பேச முடியாத நண்பனின் கடைசி நேர போராட்டம்

சென்னையில் மின் கம்பியை மிதித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

562 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.