ஜனசதாப்தி ரயிலில் ஏற்பட இருந்த பெரும் தீ விபத்து : முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்பட்டது
பதிவு : ஜூன் 13, 2019, 03:08 AM
மயிலாடுதுறையில் இருந்து கோவை சென்ற ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வந்ததையடுத்து ஆடுதுறை அருகே நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் இருந்து கோவை சென்ற ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வந்ததையடுத்து ஆடுதுறை அருகே நிறுத்தப்பட்டது.  பின்னர் ரயிலை ஆய்வு செய்த அதிகாரிகள், D5 ரயில் பெட்டியின் கீழே இருந்த பிரேக்குகள் இறுகி அதில் இருந்து புகை வந்ததாகவும், ரயில் நிறுத்தப்பட்டு இருக்காவிட்டால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தப் பெட்டிக்குரிய அனைத்து பிரேக்குகளும் வண்டியின் இணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின், 20 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் கோவையை நோக்கி புறப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1219 views

பிற செய்திகள்

நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக வங்கி நோட்டீஸ் - மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை

நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக, வங்கி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியதால், விவசாயி ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

15 views

5 ஆண்டு சட்டப்படிப்பு - கட்ஆப் மதிப்பெண் வெளியீடு

5 ஆண்டு சட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

14 views

தண்ணீர் தட்டுப்பாடு, காவிரி படுகைக்கும் வரும் - பேராசிரியர் ஜெயராமன் எச்சரிக்கை

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, காவிரி படுகைக்கும் வரும் அபாயம் உள்ளதாக மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் எச்சரித்துள்ளார்.

9 views

மேட்டூர் அணையில் மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.

8 views

இலங்கை சிறையில் உள்ள 18 மீனவர்கள் விடுதலைக்கு நன்றி - பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் மீனவர்கள்

மீன்வளத் துறைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதற்கும், இலங்கை சிறையில் இருந்து 18 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்புகின்றனர்.

7 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு - வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.