இருப்பிட சான்று வழங்க அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு : தாசில்தார் அலுவலகத்தில் மயக்கமடைந்தவர் உயிரிழப்பு
பதிவு : ஜூன் 13, 2019, 03:00 AM
மகனை உயர் கல்வியில் சேர்ப்பதற்காக இருப்பிட சான்று பெற சென்றவர் தாசில்தார் அலுவலகத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன், தனது மகனை உயர் கல்வியில் சேர்க்க முயற்சித்து வந்துள்ளார். அதற்கு இருப்பிட சான்று தேவைப்பட்டதால், கடந்த 15 தினங்களாக அவர் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு தினமும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நடைபெற்று வந்ததையடுத்து கிருஷ்ணன், அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வருவாய்த் துறை அதிகாரிகள் இருப்பிட சான்று வழங்குவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததையடுத்து, சாப்பாடு, தண்ணீரின்றி அலைந்ததாலேயே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2254 views

பிற செய்திகள்

சர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு

சர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.

3 views

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்

இங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

17 views

139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,

5 views

சென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.

26 views

கோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

82 views

தீவிரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு தீவிரம்

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பாபு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.