அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் பேருந்து நிறுத்தம் : பொதுமக்கள் பாராட்டு
பதிவு : ஜூன் 13, 2019, 02:56 AM
கிருஷ்ணகிரியில் நவீன வசதிகளுடன் ஹைடெக் பேருந்து நிறுத்தத்தை தனியார் நிறுவனம் ஒன்று அமைத்து பராமரித்து வருகிறது.
TCR CIRCLE என்ற பெயரில் பூங்கா மற்றும் அதனுடன் பேருந்து நிறுத்தத்தை கிருஷ்ணகிரி நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அமைத்துள்ளது. பயணிகள் அமர இருக்கைகள், மின் விளக்குகள், மின்விசிறிகள், மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜர் பிளக் பாயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, அதிவேக இலவச இணையதள வசதி, கண்காணிப்பு கேமராக்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, குப்பைத்தொட்டி , இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக பேசும் வகையிலான தொலைபேசி வசதி என பல்வேறு வசதிகளோடு இந்த ஹைடெக் பேருந்து நிறுத்தம் உள்ளது.  ஒரு தனியார் நிறுவனம் தன் சொந்த செலவில் ஹைடெக் வசதிகளோடு பேருந்து நிறுத்தம் அமைத்துள்ளது. சுயநலம் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் எந்தவித ஆதாயமும் தேடாமல் தனது சொந்த பணத்தில் ஹைடெக் பேருந்து நிறுத்தம் அமைத்த தனியார் மருத்துவமனை நிறுவனர் சவுந்தர்ராஜனுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

8 views

ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

7 views

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

30 views

காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் : ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை, 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

70 views

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

14 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.