கர்ப்பமடைந்த பின் திருமணம் செய்ய மறுப்பு : காதலன் மீது நடவடிக்கை எடுக்ககோரி காதலி தர்ணா
பதிவு : ஜூன் 13, 2019, 02:43 AM
திருமண ஆசைக்கூறி கர்ப்பமாக்கிய காதலனை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் லத்திபா. இவருக்கும் பம்பல் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. திருமண ஆசையில் இருவரும் நெருங்கி பழகியதால் கடந்த 2017 ஆண்டு லத்திபா கர்ப்பம் அடைந்தார். எனினும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அரவிந்த குடும்பத்தினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அரவிந்த் தாக்கியதில் லத்திபாவிற்கு கருகலைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் சிறிது இடைவேளைக்கு பிறகு லத்திபாவை சந்தித்த அரவிந்த், நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு திருமணம் செய்துக்கொள்வதாக மீண்டும் நம்பிக்கை கொடுத்துள்ளார். இதனையடுத்து நெருக்கம் ஏற்பட லத்திபா கர்ப்பம் அடைந்தார். இதனையடுத்து மீண்டும் திருமணம் செய்ய அரவிந்த் மறுத்ததை அடுத்து லத்திபா வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் அரவிந்த் மீது லத்திபா புகார் அளித்தார். ஆனால் அரவிந்துக்கு சாதகமாக போலீசார் செயல்படுவதாக கூறி, காவல் நிலைய வாசலில் லத்திபா அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அரவிந்த் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின் லத்திபா தனது போராட்டத்தை கைவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1297 views

பிற செய்திகள்

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

சிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்

கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

15 views

நகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...

சென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

89 views

கன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்

கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

174 views

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.