அனைவருக்கும் கழிப்பிட வசதி திட்டத்தை பயன்படுத்தி மோசடி : பணத்தை மீட்டு, வீடு வீடாக சென்று வழங்கிய அதிகாரிகள்
பதிவு : ஜூன் 13, 2019, 01:59 AM
மத்திய அரசின் அனைவருக்கும் கழிப்பிட வசதி திட்டத்தை பயன்படுத்தி மோசடி செய்த பணத்தை, அதிகாரிகள் மீட்டு, வீடுவீடாக சென்று வழங்கிய சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது
கடந்த 2016 ஆம் ஆண்டு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள இச்சிப்பட்டி, தேவாரம்பாளையம் , சிங்கப்பூர் நகர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் கழிப்பிட வசதி திட்டத்திற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக, ஒப்பந்த ஊழியர் சத்யா, பயனாளிகளுக்கு மானியம் வழங்கிட ஒவ்வொருவரிடமும், 1500 முதல் 2 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.  ஆனால், மானிய தொகை கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்த மக்கள், சத்யா மீது மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், தேர்வு செய்திருந்த 92 பயனாளிகளில், 36 பேர் மட்டுமே தகுதி உடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சத்யா லஞ்சமாக பெற்ற பணத்தை அவரிடம் இருந்து மீட்ட அதிகாரிகள்  வீடு வீடாக சென்று மக்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

4 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

3 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

16 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

11 views

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

72 views

தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.