மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி கைது
பதிவு : ஜூன் 13, 2019, 01:45 AM
மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் - சரண்யா தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்த்து வந்த ஐயப்பன், கேரளாவில் புதிதாக காண்டிராக்ட் வேலை எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி சரண்யாவின் தங்கை அப்பகுதியை சேர்ந்த இளைஞனை காதலிப்பதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு ஐயப்பனிடம் உதவியை நாடியுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட ஐயப்பன், இதை வைத்து பத்தாம் வகுப்பு படிக்கும் மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்ததை ஐயப்பனிடம் தெரிவிக்க, காதலன் ஏமாற்றி விட்டதாக மருத்துவர்களிடம் கூறும்படி மிரட்டி மருத்துவமனைக்கு கருக்கலைக்க அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோததித்த மருத்துவர்கள், மாணவி 16 வயதுடையவள் என்பதை அறிந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஐயப்பன் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகி விட்டார். மாணவியை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்து நடந்தவற்றை அறிந்துள்ளனர். இதனிடையே தலைமறைவான ஐயப்பனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த ஆறு மாதங்களாக மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஐயப்பனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1146 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5433 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1317 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4534 views

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

10 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

12 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

18 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

6 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

9 views

சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.