ராமநாதபுரம் - தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு : சுற்றுச்சூழல், வனத்துறை செயலருக்கு நோட்டீஸ்
பதிவு : ஜூன் 13, 2019, 12:45 AM
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டுச் செல்லும் திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கான 700 கோடி திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்துவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.  இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1238 views

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

10 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

13 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

20 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

7 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

10 views

சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.