வாயு புயல் காரணமாக நெல்லை கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
பதிவு : ஜூன் 12, 2019, 01:32 PM
வாயு புயல் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுகிறது.
வாயு புயல் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில்  கடல் சீற்றம் காணப்படுகிறது. நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால்,  கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான பகுதிகளில் வைக்குமாறும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் சூறைக்காற்று :கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வருகிறது.  கடற்பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் ஐந்தாவது நாளாக 500க்கும் மேற்பட்ட கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே, மேற்கு கடற்பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், தற்போது நாட்டுப்படகுகளும் செல்லாததால் மீன் விற்பனை அடியோடி முடங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்

திருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

18 views

தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

தர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

348 views

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

15 views

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

12 views

1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்

காரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.

7 views

தமிழகத்திற்கு அலர்ட் : 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்?

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

147 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.