அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
பதிவு : ஜூன் 12, 2019, 01:18 PM
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல விஷயங்கள் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகள், ஒற்றைத் தலைமை கோரி போர்க்கொடி தூக்கிய ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் உட்கட்சி விவகாரம், மக்களவை,  சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராஜன் செல்லப்பா கருத்துக்கு ஆதரவு தெரிவித்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிகிறது. அதேபோல், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேருக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்படவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

பிற செய்திகள்

பழச்சாற்றில் மதுவகைகளை கலந்து விற்பனை - 2 பேரை கைது செய்தது காவல்துறை

சென்னையில் மது கலந்த பழச்சாறு தயாரித்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

5 views

சென்னையில் ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

14 views

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு1,500-ஐ கடந்தது

தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 views

என்.எல்.சி.யில் விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

நெய்வேலி அனல் மின் நிலையத்தில், கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

17 views

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணை

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

166 views

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.