"4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்" - முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்
பதிவு : ஜூன் 12, 2019, 03:10 AM
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன், மீஞ்சூர் - திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன், மீஞ்சூர் - திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கவுண்டர்பாளையம், சுப்பாரெட்டிபாளையம், பள்ளிபுரம், கொண்டக்கரை உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். நான்கு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரும் உவர்ப்பு நீராக இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிவித்த பெண்கள், பணம் கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறினர். மேலும் தங்களது கிராமத்தில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1254 views

பிற செய்திகள்

சிதம்பரம் அருகே இருளர் சமூக சிறுவர் சிறுமியர்கள் பள்ளியில் சேர்ப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

1 views

சிவகங்கை அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் மீது தாக்குதல் :ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

சிவகங்கையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியதாக கூறி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 views

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு : கோயில் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் பக்தர்களுக்கு ஊழியர்களே முதலுதவி சிகிச்சை அளிக்க பயிற்சி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

5 views

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு

தென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

6 views

தமிழகத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம்

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை விதிக்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளில் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க ​வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.