பறக்கும் கேமரா...30க்கும் மேற்பட்ட செல்போன்கள்... - அச்சுறுத்திவந்த செல்போன் திருட்டு கும்பல் சிக்கியது
பதிவு : ஜூன் 12, 2019, 01:35 AM
திண்டுக்கல் மாவட்டம் ந‌த்த‌த்தை அச்சுறுத்தி வந்த செல்போன் திருட்டு கும்பல் போலீசார் வசம் சிக்கியுள்ளது.
ந‌த்த‌த்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், ஒத்தக்கடை பாலம் அருகே குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கரவாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் செல்போனை பறித்துச் சென்றுள்ளது. இது குறித்து சாணர்பட்டி போலீசாரிடம் குமார் புகார் அளித்துள்ளார். ந‌த்தம், சாணர்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து, செல்போன் திருட்டு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால், போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்த‌னர். இந்த நிலையில், ந‌த்தம் தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில், தலா 3 பேர் என 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து சுமார் 30 செல்போன்களையும், பறக்கும் கேமரா ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அவர்களிடம் விசாரித்த‌தில், செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து,  அஜய், சிவா, பெரியசாமி, அருள் முருகன், ஸ்டாலின் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

7 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

8 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

29 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

13 views

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

79 views

தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.