மின்வாரிய உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பான வழக்கு : தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
பதிவு : ஜூன் 11, 2019, 11:44 PM
உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பாக, மின் வாரிய தலைமை பொறியாளர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை திருவாப்பூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். கடந்த 2018 பிப்ரவரி 14-ல் உதவி பொறியாளர் பணியிட தேர்வில் இட ஒதுக்கீட்டு கொள்கை முறையாக பின்பற்றப்படவில்லை என ஏப்ரல் 27-ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், அதில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பரிசீலிக்காமல் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் கூறி இருந்தார். தேர்வு பட்டியலை ரத்து செய்து,  இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி புதிய  தேர்வுப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார்,  மின்வாரிய தலைமை பொறியாளர், 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், பணி நியமனம் என்பது, இந்த வழக்கில் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவித்ததோடு, தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1297 views

பிற செய்திகள்

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

8 views

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.

13 views

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

4 views

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ல் நிறைவு

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

10 views

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.