"சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை" - அடுத்த 5 ஆண்டுகளில் வழங்க மத்திய அரசு முடிவு
பதிவு : ஜூன் 11, 2019, 11:36 PM
அடுத்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த 5 கோடி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த 5 கோடி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வீ, இதில் 50 சதவிகிதம் மானவிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மதவாதத்தை அகற்றும் வகையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு என்றும் தெரிவித்தார். மேலும் மத்திய மாநில அரசு பணிகளுக்கான தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நக்வீ தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் உள்ள மதரசாவில் பொதுப் பாடத்திட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர்  முக்தர் அபாஸ் நக்வி கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.

64 views

17வது மக்களவையின் சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா

17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

52 views

"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.

936 views

ஆந்திரா : மனைவியை கொலை செய்து தலையுடன் கணவன் காவல்நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 views

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

983 views

கர்நாடகா : விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடகாவில் உள்ள மடிகேரி நகரத்தில், வாகன விபத்து ஒன்றில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

770 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.