அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் - விசாரிக்க அனுமதி கோரி காத்து கிடக்கும் அதிகாரிகள்
பதிவு : ஜூன் 11, 2019, 02:36 PM
123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக காத்து கிடக்கின்றனர்.
அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச  புகார்கள் தொடர்பாக மத்திய  ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் இறுதி விசாரணை நடத்தும். இதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட துறையால் 4 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள்  தொடர்பாக  விசாரணை நடத்த இதுவரை சம்பந்தப்பட்ட துறைகளால் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 57  பேர் அரசு அதிகாரிகள் என்றும், 45 பேர் பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 வழக்குகள் மத்திய பணியாளர் துறை அமைச்சகத்திலும், ரெயில்வே அமைச்சகம் மற்றும் உத்தரபிரதேச மாநில அரசிலும் தலா 5 வழக்குகளும் விசாரணைக்காக அனுமதி கோரி காத்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு, அமலாக்கத்துறை இயக்குனரக உதவி இயக்குனர்,  வருமான வரித்துறை அதிகாரி ஆகியோர் மீதான லஞ்ச புகார் தொடர்பாக விசாரணை நடத்த இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் , ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, இமாச்சல் பிரதேஷ், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு  வழக்கு தொடர்பாக விசாரணைக்கான அனுமதி  கிடைக்கவில்லை என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரபேல் போர் விமான ஊழல் புகார் விவகாரம்: காங். தலைவர் ராகுல்காந்தி எச்சரிக்கை

மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரபேல் போர் விமான ஊழல் புகார் விவகாரம் குறித்து, கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

100 views

"எளிமையாக வாழ்ந்தால் ஊழல் தேவைப்படாது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

எளிமையாக வாழ்ந்தால், ஊழல் தேவைப்படாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

265 views

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது - டி. ராஜா

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்கமுடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

154 views

"பதவியில் ஏற்றியவர்களை மறந்துவிட்டார்கள்" - தினகரன்

பதவியில் இருப்பவர்கள், பதவியில் ஏற்றியவர்களை மறந்துவிட்டு மத்திய அரசுக்கு சேவகம் செய்துவருவதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்

199 views

பிற செய்திகள்

ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.

55 views

17வது மக்களவையின் சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா

17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

46 views

"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.

890 views

ஆந்திரா : மனைவியை கொலை செய்து தலையுடன் கணவன் காவல்நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 views

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

935 views

கர்நாடகா : விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடகாவில் உள்ள மடிகேரி நகரத்தில், வாகன விபத்து ஒன்றில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

721 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.