நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்
பதிவு : ஜூன் 11, 2019, 01:55 PM
நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
லண்டனில் வசிக்கும்  மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தனக்கு  6  மாதங்கள் பரோல் வழங்க கோரி நளினி சென்னை உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தார்.  ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ள போதும்,  கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தான் வழங்கிய பரோல் விண்ணப்பத்தை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்றும் நளினி மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் நளினி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு  இன்று  விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நளினி , தனது மகள் திருமண ஏற்பாடு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும்  உயர்நீதிமன்றத்தில்  நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நளினியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என்பது குறித்து  பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

பிற செய்திகள்

"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

24 views

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25 views

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

20 views

"அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு" - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

13 views

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் வேலூர் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இந்த தொகுப்பு.

14 views

சாத்தனூர் அணையின் மதகுகளை ஏற்ற மறுத்த ஊழியர்கள் : விவசாய சங்கத்தினர் ஊழியர்களிடையே தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை பார்வையிட சென்ற விவசாய சங்கத்தினருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.