ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பதிவு : ஜூன் 11, 2019, 01:44 PM
மாற்றம் : ஜூன் 11, 2019, 01:47 PM
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் 109 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
பஞ்சாப்பில் ஆழ்துளை கிணற்றில்  விழுந்த 2 வயது சிறுவன்  109 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பஞ்சாப்பின் சாங்ரூர் நகரில் உள்ள பகவான்புரா கிராமத்தை சேர்ந்த பதேவீர் என்ற 2 வயது சிறுவன்,  வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் கிணற்றின் அருகே மற்றொரு குழி தோண்டி சுமார் 109 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

பிற செய்திகள்

அமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

24 views

மேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்

மேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.

14 views

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

71 views

"ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 155 பேர் கைது" - மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 155 நபர்களை, இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

34 views

சந்திரபாபு நாயுடு மகன் இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

ஆந்திராவில் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

368 views

"புதுச்சேரியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்" - பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரியில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.