பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை
பதிவு : ஜூன் 11, 2019, 08:52 AM
கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா.  கடலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த அவரைக் குறித்து தவறான தகவலை, அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார்  என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்களும், கிராமத்தினரும் பிரேம்குமார் வீட்டை அடித்து நொறுக்கியுள்ள நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த அவரது அத்தை மகன் விக்னேஷ், ராதிகா இறந்த செய்தி கேட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, விக்னேஷின் தந்தையும், ராதிகாவின் தந்தையும் தனித்தனி புகாரை மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவான பிரேம்குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், ராதிகா மரணத்திற்கு நியாயம் கேட்டும் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில்,  ராதிகா மற்றும் விக்னேஷ் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் குறவன்குப்பம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1238 views

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

10 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

12 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

18 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

6 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

9 views

சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.