சுமார் 3 மணி நேரம் மிதமான மழை : அறைகளுக்குள்ளேயே முடங்கிய சுற்றுலா பயணிகள்
பதிவு : ஜூன் 11, 2019, 01:53 AM
மாற்றம் : ஜூன் 11, 2019, 01:56 AM
கொடைக்கானலில் சுமார் 3 மணி நேரம் மிதமான மழை பெய்தது.
கொடைக்கானலில் சுமார் 3 மணி நேரம் மிதமான மழை பெய்தது. மாலையில் மழை  தொடங்கி விடாமல் பெய்தததால் சுற்றுலா பயணிகள் அறைகளுக்குள்ளேயே முடங்கினர். மழை காரணமாக ஏற்கனவே நிரம்பிய நட்சத்திர ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறியது. பருவ மழை தொடங்கியுள்ளதால் கொடைக்கானலில் குளிரின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணைகள் அனைத்தும் வறட்சியை சந்தித்தன. இந்த நிலையில், தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை தொடங்கியுள்ளது. தென்காசி, செங்கோட்டை, களக்காடு என சில பகுதிகளில் கன மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

திடீர் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி நிலையில், பெரியகுளம், தேவதானப்பட்டி, லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1290 views

பிற செய்திகள்

"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

13 views

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23 views

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

16 views

"அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு" - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

13 views

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் வேலூர் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இந்த தொகுப்பு.

13 views

சாத்தனூர் அணையின் மதகுகளை ஏற்ற மறுத்த ஊழியர்கள் : விவசாய சங்கத்தினர் ஊழியர்களிடையே தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை பார்வையிட சென்ற விவசாய சங்கத்தினருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.