தேவனாம்பட்டினம் புறக்காவல் நிலையம் திறப்பு
பதிவு : ஜூன் 11, 2019, 01:30 AM
சிதிலமடைந்த காவல் நிலையத்தை புதுப்பிக்க, ஓய்வு பெற்ற பின்னரும் பணியாற்றி உதவி ஆய்வாளரை கவுரவித்தத, மாவட்ட எஸ்.பி.யின் நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடலூர் சில்வர் பீச்சில் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தின் புறக்காவல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், 2004 சுனாமியின் போது தரைமட்டம் ஆனது. இதனைத் தொடர்ந்து  காவல் நிலையம் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 2011 இறுதியில் தானே புயலின்போதும் கடும் சேதத்தை சந்தித்தது. பின்னர் புனரமைப்பு பணிகள் நடைபெறாமல் அங்கு புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்நி​லையில், கடந்த ஆண்டு தேவனாம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற ராஜசேகர், பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவியுடன் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பணி ஓய்வுபெற்ற நிலையிலும் ராஜசேகர், புனரமைப்பு பணிகளை அடிக்கடி பார்வையிட்டு பல்வேறு உதவிகளை பெற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில்,மாவட்ட எஸ்.பி. சரவணன் திங்கள் மாலை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ராஜசேகரை காவல் நிலையத்தை திறந்து வைக்க எஸ்.பி. கேட்டுக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத ராஜசேகர் காவல் நிலையத்தை திறந்து வைத்த போது, அங்கு இருந்த கல்வெட்டில் அவருடைய பெயர் இருந்ததையும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார். ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளரை, காவல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி.யின் நடவடிக்கை விழாவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

263 views

பிற செய்திகள்

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

சிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்

கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

15 views

நகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...

சென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

92 views

கன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்

கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

189 views

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.