அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணி வைத்து தைத்த விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் புகார்
பதிவு : ஜூன் 10, 2019, 05:13 PM
வயிற்றில் துணியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை பாப்பநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த  புவனேஸ்வரிக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த போது  வயிற்றில் துணியை வைத்து  மருத்துவர் சந்திரகலா தைத்து விட்டதாக கூறப்படுகிறது. 4 மாதங்களுக்கு பிறகு   இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்ற போது வயிற்றில் துணி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த துணி அகற்றப்பட்ட நிலையில்,  மலக்குடல் சீழ் பிடித்து ஆபத்தான நிலையில், தற்போது புவனேஸ்வரிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது .இந்நிலையில், வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவர் சந்திரகலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று புவனேஸ்வரி புகார் அளித்துள்ளார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவனக் குறைவாக அறுவை சிகிச்சை செய்ததோடு மட்டுமல்லாமல், அதுகுறித்து கேட்க சென்ற போது தகாத வார்த்தைகளால் மருத்துவர் திட்டி மிரட்டியதாகவும் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.