தெலங்கானா மாநிலத்தில் உரிய ஆவணம் இல்லாததால் 10 டன் வெள்ளி கட்டிகள் பறிமுதல்
பதிவு : ஜூன் 10, 2019, 04:59 PM
தெலங்கானா மாநிலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 10 டன் வெள்ளி கட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
செகந்திராபாத் அடுத்த போகினபள்ளி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வங்கி ஏடிஎம்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யும் வாகனத்தில் இருந்து சிறுசிறு பெட்டிகள் வேறொரு கண்டெய்னர் லாரிக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், அங்கு சென்று சோதனை நடத்திய போது, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள10 டன் வெள்ளிக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஊழியர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. வெள்ளிக்கட்டிகள் மற்றும் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த வெள்ளி கட்டிகள், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக எடுத்துவரப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

இன்று துவங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - புதிய எம்.பி.க்கள் இன்றும், நாளையும் பதவியேற்கிறார்கள்

மோடி இரண்டாவது முறையாக பிரதமரான பின், முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது..

5 views

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

14 views

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

33 views

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

68 views

பெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்

தன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

294 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.