தாராபுரம் அருகே ஏசி வகுப்பறைகளுடன் இயங்கும் அரசு பள்ளி : தொடர்ந்து அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கை
பதிவு : ஜூன் 10, 2019, 04:41 PM
தாராபுரம் அருகேயுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் காணப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளி 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமீப காலமாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில்,அந்த பள்ளியில் பணியாற்றி வரும் 6 ஆசிரியர்களும் சேர்ந்து ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் நவீன வகுப்பறைகளை உருவாக்கியுள்ளனர்.மேலும் தங்களது சொந்த செலவில் வகுப்பறைகளில் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாகவும், மாணவ,மாணவிகளுக்கு இலவசமாகவே யோகா, கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளையும் அளிப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 
அதேபோல் மாணவ மாணவியர்களை அழைத்துவர பெற்றோர் சங்கம் மூலம் இலவச வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

மதுபோதையில் பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

24 views

ஒசூர் அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி குரங்கு பலி

ஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

6 views

குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8 views

தண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

11 views

சென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை

சென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.

10 views

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.