எம்எல்ஏ பெரியகருப்பன் மீது நடவடிக்கை கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பதிவு : ஜூன் 10, 2019, 04:16 PM
எம்எல்ஏ பெரியகருப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
எம்எல்ஏ பெரியகருப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ  பெரிய கருப்பன், பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து கேள்வி கேட்டதால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். எம்எல்ஏ பதவியை தவறாக பயன்படுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் எந்த வித முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பிற செய்திகள்

குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது.

50 views

ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் 22வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

16 views

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

9 views

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

65 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

473 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.