கத்துவா சிறுமி கொல்லப்பட்ட வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள்
பதிவு : ஜூன் 10, 2019, 02:12 PM
நாட்டையே உலுக்கிய கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில், 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள கத்துவா கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் கிராமத்தின் தலைவர் சஞ்சி ராம், அவரின் மகன் விஷால், சஞ்சி ராமின் நண்பர்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்க முயன்ற 3 காவலர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் மீது வழக்கு தொடரப்படவில்லை. இதையடுத்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பதான்கோட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. ஒரு வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 3ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில், 6 பேரை குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில்,  சஞ்சி ராமின் மகன் விஷால், சம்பவம் நடந்த நேரத்தில் தான் பள்ளியில் தேர்வெழுதி கொண்டிருந்ததாக கூறி அளித்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவனை விடுவித்துள்ளது.  

பிற செய்திகள்

ஜம்மு, காஷ்மீரில் கட்டப்பட்ட 6 புதிய பாலங்கள் - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், எல்லை சாலை அமைப்பு நிறுவனம், ரூ.42 கோடி செலவில் கட்டி முடித்துள்ள 6 புதிய பாலங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது.

1 views

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.

5 views

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேச பிரபல ரவுடி விகாஷ் தூபே கைது

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஷ் தூபே மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

12 views

இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

டெல்லியில் மேலும் 2033 பேருக்கு கொரோனா - 24 மணி நேரத்தில் 48 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்தில் 33 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

48 views

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் குடியேறிய,ஏழைகளுக்கு வாடகை வீடுகள் கட்டித்தர திட்டம்- பிரகாஷ் ஜவடேகர்

இந்தாண்டு நவம்பர் மாதம் வரை 81 கோடி மக்களுக்கு, மேலும் 3 மாதத்திற்கு, இலவச அரிசி,பருப்பு, கோதுமை மற்றும், நகர்புறங்களில் குடியேறிய ஏழைகளுக்கு, வாடகை வீடுகள் கட்டித்தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

103 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.