மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
பதிவு : ஜூன் 10, 2019, 11:18 AM
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின்  பயன்பாட்டை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2025 ஆண்டுக்கு பிறகு நகரப் பகுதியில் மின்கலன்களால் இயங்கும் 4 சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிக்க நிதி ஆயோக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளது. கார் உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முடிவு செய்துள்ளார். படிப்படியாக மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி - மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் என கட்கரி தகவல்

'ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும்' என்கிற சட்டப் பிரிவை நீக்க, மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

619 views

"சுங்க கட்டணம் ஒருபோதும் ரத்து செய்யப்படாது" - அமைச்சர் நிதின்கட்கரி திட்டவட்டம்

சர்வதேச தரத்தில் சாலை அமைக்க தமது அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக மக்களவையில் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ப​திலளித்து பேசிய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

72 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி

இந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

25 views

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

64 views

நாட்டில் வேலைக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் - தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து

நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும் வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.

20 views

இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

19 views

அண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை

தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

14 views

"நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

96 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.