அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
பதிவு : ஜூன் 10, 2019, 07:58 AM
ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலி.
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுண்டகிரி என்ற இடத்தில் அதிகாலையில், திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, திடீரென ஆக்சில் கட்டாகி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். அப்போது அந்த வழியாக கிருஷ்ணகிரி நோக்கி அதிகவேகமாக சென்ற மற்றோரு அரசு பேருந்து, நின்று கொண்டிருந்த பேருந்தின் மோதாமல் இருக்க, இடதுபுறமாக சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தின் பின்னால் அதிவேகமாக வந்த லாரி, பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் ஏற்கனவே பழுதாகி நின்றிருந்த பேருந்தில் இருந்து இறங்கி, சாலையை கடந்த சென்ற பயணிகள் மீதும் இந்த லாரி மோதியுள்ளது. இதில் சாலையை கடக்க முயன்ற 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

தொடர்புடைய செய்திகள்

வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் சாமி ஏரி - குட்டிகளுடன் ஆனந்த குளியல் போடும் யானைகள்

ஒசூர் அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலுக்கு இதமாக காட்டு யானைகள்,அங்குள்ள சாமி ஏரியில், காட்டு யானைகள் ஆனந்த குளியல் போடுகின்றன

91 views

ஒசூர் அருகே எருது விடும் விழா - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்

ஒசூர் அருகே மேடுபள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

48 views

பாரம்பரிய எருதுவிடும் விழா : 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு...

ஒசூர் அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா நடைபெற்றது.

143 views

பிற செய்திகள்

சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது

2 views

சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

3 views

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9 views

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

15 views

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

18 views

ஈரோட்டில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நூதன பிரசாரம்

ஈரோட்டில் கட்டாய ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அச்சக தொழிலாளி ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.