அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் : தமிழக மேற்கு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
பதிவு : ஜூன் 10, 2019, 07:09 AM
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த தாழ்வு நிலை, அடுத்த 48 மணிநேரத்தில் தென்கிழக்கு, கிழக்கு மத்திய பகுதிகளில் நகர்ந்து வருகிறது. இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதியில் நகர்ந்து புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் லட்சத்தீவு, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதிய புயல் சின்னத்தால், கடலோர கர்நாடகா, கோவா, அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் அடுத்த 3 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரூர் : கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம், புலியூர், லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

81 views

"தென் தமிழகத்தில் நாளை, மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசையில் காற்று வலுப்பெற்று வருவதால் தென் தமிழகத்தில் நாளை, சனிக்கிழமை ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1195 views

பிற செய்திகள்

காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் : ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை, 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2 views

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

11 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

10 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

46 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

15 views

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.