புழல் ஏரி வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் பணி நிறுத்தம்
பதிவு : ஜூன் 10, 2019, 02:45 AM
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரி வறண்டதால் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் ஏற்கனவே வறண்டு விட்ட நிலையில், புழல் ஏரியில் தண்ணீர் மிக குறைந்த அளவிலேயே இருந்ததால் ராட்சத மோட்டார்கள் மூலம் வினாடிக்கு 6 கனஅடி வீதம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, சென்னைக்கான குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவை கொண்ட புழல் ஏரியில் தற்போது, 2 மில்லியன் கன அடி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வந்த நான்கு முக்கிய ஏரிகளும் வறண்டு, தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு

மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

126 views

டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

75 views

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

64 views

ஆசிரியர்களுக்கும் இனி, இலவச மடிக்கணினி - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

61 views

பிற செய்திகள்

கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

4 views

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது

நேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 views

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

12 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

26 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

2913 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.