இருசக்கர வாகன விபத்தில் பள்ளிச் சிறுமி உயிரிழப்பு
பதிவு : ஜூன் 09, 2019, 06:22 PM
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாண்டில்யன் - வடிவுக்கரசி தம்பதியின் மகள் அக்ஷ்யா.
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாண்டில்யன் - வடிவுக்கரசி தம்பதியின் மகள் அக்ஷ்யா.
7 வயதான அந்தச் சிறுமி, தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை  கொடுங்கையூரில் இருந்து மூலக்கடை பகுதியில் உள்ள கடையில் மகளின் பிறந்த நாளுக்கு துணிமணிகள் வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் அக்ஷ்யாவுடன் அவரது தந்தை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  மூலக்கடை சந்திப்பு அருகே எதிரே வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய கீழே விழுந்ததில் அக்ஷ்யாவுக்கு  மண்டை உடைந்து, ரத்தம் பீறிட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அக்ஷ்யா வழியிலேயே உயிரிழந்தது தெரிந்தது. பிறந்தநாள் கொண்டாடும் வேளையில் தந்தை கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1292 views

பிற செய்திகள்

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

10 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

10 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

40 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

15 views

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

87 views

தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.