தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் - ஸ்டாலின்
பதிவு : ஜூன் 09, 2019, 05:53 PM
தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கை மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தாமல் இருப்பதால் அரசு துறை பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க , பேரவையை கூட்டுவதற்கே பிரதான எதிர்க்கட்சி குரல் எழுப்ப வேண்டிய நிலை ஏற்படுவதாக அந்த அறிக்கையில் ஸ்டாலின்  விவரித்துள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவும் பல்வேறு சூழ்நிலைகளை பட்டியலிட்டுள்ள ஸ்டாலின், அதுகுறித்து விவாதிக்க உடனடியாக பேரவையை கூட்டிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடுக்கும் கேள்வி கணைகளால் எழுந்துள்ள நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக பேரவையை கூட்டுவதற்கு ,  முதலமைச்சர் பயம் கொண்டால், ஆளுநர் தலையிட்டு பேரவையை கூட்டிட வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.பேரவையை கூட்டுவதை மேலும் தள்ளிப்போடுவது தேவையற்ற குழப்பங்களுக்கும் நெருக்கடிக்கும் வழிவகுத்து விடும் என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

665 views

நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு

நீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

150 views

பிற செய்திகள்

சார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்

சார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

149 views

ஸ்டாலினின் திடீர் மாற்றம்...ஆளுநரின் திடீர் அழைப்பு...

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

463 views

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

41 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

56 views

இந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: ஆளுநரின் திடீர் அழைப்பும்...ஸ்டாலினின் திடீர் மாற்றமும்..

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

92 views

ராஜேந்திரபாலாஜி உருவப்பொம்மை எரிப்பு -காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, சென்னை - தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

666 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.