தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவும் - அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி
பதிவு : ஜூன் 09, 2019, 05:45 PM
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரதமர் மோடிக்கு வெள்ளை தேக்கால் ஆன புத்தர் சிலையை சிறிசேன பரிசாக வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மோடி, பின்னர் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விருந்தில் பங்கேற்றார். இதையடுத்து சிறிசேன உடனான சந்திப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, 10 நாட்களில் நண்பர் சிறிசேன உடனான இரண்டாவது சந்திப்பு இது என்றும் தீவிரவாதம் என்பது இருநாடுகளுக்குமே அச்சுறுத்தல் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.   இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாதத்தை வேரறுக்க இருநாடுகளும் இணைந்து பாடுபட வேண்டும் என்று பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கூட்டு முயற்சி
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷேவை சந்தித்து பேசினார். அப்போது, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இருநாட்டின் கூட்டு முயற்சிக்கான தேவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்புஇலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அதிபர் சிறிசேனாவுடன், இருதரப்பு உறவு குறித்து மோடி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் தலைமையிலான நிர்வாகிகள், மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின்னர், வெளியேற்றப்பட்ட தமிழர்களை, மீண்டும் அவர்களது இருப்பிடத்திலேயே குடியேற்றுவது உள்ளிட்ட இலங்கை தமிழர் நலன் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

245 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

218 views

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

78 views

காவிரியில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்

கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

46 views

பிற செய்திகள்

சீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்

இலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது

0 views

இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்

இந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.

1 views

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.

1 views

"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது"

"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி"

5 views

சிங்கப்பூரில் அதிக காற்று மாசால் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.