அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கட்சி தலைமை வேண்டுகோள்
பதிவு : ஜூன் 09, 2019, 04:43 PM
கட்சியின் நிர்வாக முறைகள் மற்றும் தேர்தல் முடிவுகள் பற்றிய தங்கள் கருத்துக்களை பொதுவெளியில் கூறவேண்டாம் என்று தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு என்று எகத்தாளம் பேசியவர்கள் வாயடைக்கும் வகையில் ஜெயலலிதா அமைத்து தந்த அரசை காப்பாற்றி நான்காம் ஆண்டில் வெற்றி நடைபோடுவதாக அதில் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.விசுவாசமிக்க தொண்டர்களை கொண்ட அதிமுகவை கண்டு எதிரிகள் கூட இப்படி இருக்க ஆசைப்பட்டதாக அவர்கள் விவரித்துள்ளனர்.அன்மை காலமாக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் இனி என் செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஊடகங்கள் வாயிலாக நிர்வாகிகள் வெளியிடும் கருத்துக்கள் வரவேற்கதக்கது அல்ல என அதில் வேதனை தெரிவித்துள்ளனர்.கட்டுப்பாடும் ஒழுங்கும் கட்டாயம் தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர்கள் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களை செயற்குழு பொதுக்குழு மற்றும் ஆலோசனை கூட்டங்களில் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக நினைவுகூர்ந்துள்ளனர்.இனி கட்சியின் நிர்வாக முறை பற்றியோ தேர்தல் முடிவுகள் பற்றியோ பொதுவெளியில் கருத்துக்கள் கூறாமல், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி பணியாற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வமும், பழனிசாமியும் அறிக்கை மூலமாக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

654 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

333 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1278 views

பிற செய்திகள்

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

3 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

3 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

13 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

11 views

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

72 views

தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.