ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படவில்லையா? - பிரதமரின் கருத்துக்கு கேரள அமைச்சர்கள் மறுப்பு
பதிவு : ஜூன் 09, 2019, 02:37 AM
கேரளாவில் மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு அம்மாநில அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என  பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு அம்மாநில  அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குருவாயூரில் பிரதமர் நரேந்திரமோடி பேசியது தொடர்பாக கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் கேரளா இணைந்துள்ளதாகவும், 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி கையெழுத்திட்டதாகவும் அமைச்சர் ஷைலஜா குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தில் கேரளாவில் இருந்து 17 இலட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் 60 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ஷைலஜா குறிப்பிட்டுள்ளார். இதே போல் கேரள நிதித்துறை அமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக்கும் பிரதமரின் பேச்சை விமர்சித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பாக தவறான கருத்துக்களை பிரதமர் மோடி கூறியதாகவும், இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு கேரள அரசிற்கு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1264 views

பிற செய்திகள்

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது

25 views

ஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 views

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை இன்று முதல் அமல்

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

டெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்

டெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

6 views

மக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்

மக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.

8 views

நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை

நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.