போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை
பதிவு : ஜூன் 08, 2019, 06:00 PM
அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் ரொக்கத்தினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் ரொக்கத்தினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். அரசு போக்குவரத்து கழக  ஓட்டுனரான அவர், கடந்த 5 ஆம் தேதி குடும்பத்துடன் சிவகங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 12 சவரன் தங்க நகை மற்றும் மூன்று லட்ச ரூபாய் ரொக்கத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய செல்வகுமார், கொள்ளை சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விரைந்து வந்த போலீசார்  கை ரேகை நிபுணர்கள் உதவியுடன்  மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

68 views

போலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

83 views

கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்

திண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3834 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

59 views

அரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

சென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.

52 views

சேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

1224 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.